Wednesday, August 7, 2013

பொய்மையும் பெண்மையிடத்து

பொய்மையும் பெண்மையிடத்து


பொய் சொல்ல மாட்டேன்


இனிமே என் கிட்டே
பொய் சொன்னா
அவ்வளவுதான்
என கடுமையாக
முகத்தை வைத்துக்கொண்டு
சொல்கிறாய்
‘சாரிம்மா இனிமே
நான் பொய்யே
சொல்ல மாட்டேன்’
என நான் மீண்டும் ஒரு
பொய் சொன்னால்தான்
நீ சிரிக்கிறாய்!





போடா பொறுக்கி
<
ஏதோ சொல்லிவிட்டதற்காக
என் முகத்தில் இனி
முழிக்காதே என
சொல்லிவிட்டாய்.
சரி இனி தினமும்
காலையில் கண்ணை
மூடிக்கொண்டே உனக்கு
முத்தம் தர வேண்டியதுதான் போல
என நான் சொன்னதும்
போடா பொறுக்கி என
செல்லமாக திட்டிவிட்டு
வேகமாக வந்து ஒட்டிக்கொள்கிறாய்
அழகான வெட்கத்துடன் !





Image Hosted by ImageShack.us

என்னைக்காவது
உண்மையை சொல்லி
இருக்கியா என
நீ கோபமாக
கேட்டபொழுது
நான் பரிதாபமாக முகத்தை
வைத்துக்கொண்டு
கோபதிலயும் நீ
அழகாத்தாண்டி இருக்கே
எனக்கூறியதும்
அதுவரை
உன் முகத்தில் நிலைகொண்டிருந்த
கோபப்புயல்
வெட்கப் புயலாக
மாறியது !





கோபமான அழகு

ஏன் அடிக்கடி
நான் கோபப்படுற மாதிரி
நடந்துக்குறே என
நீ கேட்டபொழுது
கோபமா நீ இருக்கும் போது
உன் உதடு துடிக்கிறதைப்
பார்க்க அழகா இருக்கு
அதான் என நான் பயந்தவாறே
கூறிய பொய்யைக் கேட்டு
திடீரென ஏற்பட்ட உன்
வெட்கத்தை மறைக்க
முயன்றது உண்மையாகவே
அழகாக இருந்ததடி !






ஐஸ் வைக்காதீங்க


இந்தப் புடவை
அழகா இருக்கா
என உனக்குப் பிடித்த
புடவையை காட்டி கேட்கிறாய்
அழகாத்தான் இருக்கு
ஆனா உன்னைவிட இல்லை
என நான் கூறியதைக்
கேட்டு ‘போதும் ரொம்ப
ஐஸ் வைக்காதீங்க’
என என் பொய்யை
ரசித்துக்கொண்டே
சொல்கிறாய்

பின் எப்படி பார்ப்பதாம்?

பின் எப்படி பார்ப்பதாம்?


மஞ்சள் தேவதை




உன்னை முதன் முதலில்
அந்த மாம்பழ நிற
பட்டுப்பாவாடையில் பார்த்ததும்
எனக்குத்தோன்றியது
தேவதைகள் வெள்ளை
உடைகளில் தான்
வரவேண்டுமா என்ன ?





எப்படி இப்படி







கோவிலுக்கெல்லாம்
இப்படி வராதே
பார்
வருபவர்களெல்லாம்
உன்னைப்
பார்த்து கன்னத்தில்
போட்டுக்கொள்கிறார்கள்




அம்மன்



முதலில் இப்படி
பார்ப்பதை விடு
என்கிறாய்
கர்ப்பகிரகத்துக்குள்
இருக்கும் என்
தெய்வத்தை
பின் எப்படி
பார்ப்பதாம் ?



பாவம் அம்மா




இப்பொழுதெல்லாம்
கோவிலுக்கு
தவறாமல் வருகிறேன்
எனக்கு பக்தி
வந்து விட்டதென
என் அம்மா மிகுந்த
ஆனந்தப்படுகிறார்கள்
பாவம் அவர்களுக்கு
தெரியாது
என் பக்தி
கர்பகிரகத்துக்குள்ளிருக்கும்
அம்மனுக்காக அல்ல
அதைச் சுற்றிக்
கொண்டிருக்கும்
அம்மனுக்காக
என!



அப்படி பார்க்காதே




அப்படிப் பார்க்காதே
எனக்கு வெட்கமாக
இருக்கிறதென
முகத்தினை திருப்பிக்
கொள்கிறாய்
இருப்பினும்
என்னை நோக்கி
சிரிக்கிறது
எனக்கான உன்
உன் வெட்கம் !









அன்று
என் எதிர் வீட்டு
குழந்தையை நீ
கொஞ்சிக்கொண்டிருந்த
போதுதான்
தவழ ஆரம்பித்தது
உன்னை நோக்கி என்
மனது !








நம் பயணத்தில்
திடீரென குறுக்கே
வந்துவிட்ட
அந்த
மிதி வண்டிக்காரனை
என்னால் திட்ட
முடியவில்லை
வாழ்த்தத்தான்
தோன்றுகிறது
நீ என்
பின்னால் அமர்திருக்கும்
வேளைகளில்