Friday, September 26, 2014

நதியை விட..

நதியை விட...

நீ என்ன இப்படி
வளைந்து வளைந்து
போகிறாய்...

உன்னை விட
வளைவாய் நடப்பவளை
காண்பிக்கவா...

சண்டையிட்டு வருகிறேன்
நதியிடம்...

Wednesday, September 17, 2014

என்று கல்லூரி விடுதி...

என் கல்லூரி விடுதி

-- அந்த முதல் நாள்
நரகமென எண்ணி
விடுதியின் வாசலை
பல யோசனைகளுக்கு
பின்னர் மிதித்தேன்...

தகவல் பலகையில்
எனக்கான அறையை
பார்த்துவிட்டு....
பல எண்ணங்களுடன்
எனது அறையை அடைந்தேன்...
எனக்கு முன்
சிலர் வந்துவிட்டார்கள்
என்பதை
அழகாக காட்டிக் கொடுத்தது
செல்புகளில்
வைக்கப்படிருந்த
அவர்களின்
பெட்டிப் , படுக்கைகள்...

எனக்கென
இருந்த
செல்பில்
என்னுடைய பொருட்களையும்
வைத்துவிட்டு ...
சில அறிவுரைகளை
கூறியபடி, அப்பாவும்
"போய்ட்டு வரேண்டா"
என்றபடி
விடை பெற்றார்...
5 மணி நேரம் தான்
பயணம்,,
ஏன் "விடுதி" என்று
மனதில் எண்ணிக்கொண்டவாறே
அரைகுறை மனதுடன்
தலையசைத்தேன்...

இரவு 8 மணிக்கு
ஒவ்வொருவராக ...
அனைவரும்
வந்து சேர்ந்தார்கள்
என் அறைக்கு...
மொத்தம் 8 பேர்
யாரும் யாரிடமும்
பேசாமல்
அன்றைய இரவு
கழிந்தது...

மறுநாள்:-
உங்ககிட்ட பேஸ்ட் இருக்கா?
நான் மறந்துட்டேன்
என்றவாறே
ஒரு "நண்பன்" கேட்டான்..
நானும் என்னிடம்
உள்ளதை
எடுத்துக் கொடுத்து
தங்களைப் பற்றி
பகிர்ந்து கொண்டோம்...

அன்றைய இரவே
ஒவ்வொருவரும்
பழகிவிட்டோம்..
"நீங்க , வாங்க" தொடர்ந்தது..
ஒரு வாரம்
கழிந்த நிலையில்
நீங்க வாங்க "நீ , வா " என
மாறியது..

அப்புறம் என்ன
"மாமா , மச்சான் " தான்...
வெள்ளிக் கிழமை மாலை
லீவ் லெட்டரில்
சைன் வாங்கி விட்டதை
MLA சீட்
வாங்கி விட்டதை போல
சந்தோசப் பட்டுக்கொண்டு
புறப்படும் போது...

உலகையே
வாங்கி விட்டதாய் உணர்வோம்...
புது பேண்ட்,
புது சட்டை விகிதம்
பேக் முழுவதும்
அழுக்குத் துணிகளுடன்
ஊர் செல்லும் போதோ
ஒய்யார வரவேற்பு..

ஏய்.. எப்படா வந்த .. என்று...
வெள்ளிக் கிழமை இரவுக்கும்
திங்கள் கிழமை காலைக்கும்
அரை மணி நேரம் தானோ
என நினைக்கும் அளவுக்கு
சட்டென பறந்தோடும்
அந்த இரண்டு நாட்களும்...

மீண்டும் திங்கள் காலை
தேய்த்த துணி மணிகளுடனும்
தூக்க முடியாத அளவு
தின்பண்டங்களுடனும்
மீண்டும் விடுதி
நோக்கி பயணம்...
பலமுறை பார்த்த
படங்கள் - ஆயினும்
சலிக்காமல் பார்க்கத் தூண்டும்
சனிக்கிழமை இரவு...
ரஜினி,கமல்,அஜித்,விஜய்,
தனுஷ்,சிம்பு ,,, ஏன்
பவர் ஸ்டார் க்கும் கூட
ரசிகர்கள் இருப்பதை
சனிக்கிழமை இரவுதான்
எங்களுக்கு காட்டிக் கொடுக்கும்...

விடுதியின் சுற்றுச் சுவர்
பாளையங்கோட்டை
சிறைசாலையை
நியாபகப்படுத்தும்..

இங்கேயும்
வார்டன்கள் உண்டு...
ஆனால்..,,
கைதிகள் இல்லை...

சிறு தவறு செய்தால் கூட
"பாட்ஷா" படத்தை
நியாபகப் படுத்தும்
கொடிக் கம்பத்தில்
வைத்துதான் விசாரணை...

மெஸ் சாப்பாடுகளை
"குறையாக சொல்லும்"
சில நண்பர்கள் இருந்தாலும்
அதை "வெளுத்துக்கட்டி"
ஒரு ரவுண்டு விடும்
சில சாப்பாடு
ஜாம்பவான்களும் உண்டு...

படிப்பில் சிலர்
அரட்டைக்கு பலர்
படிப்பிற்கும் , அரட்டைக்கும் சிலர்
என ,,
பலவகையான
பறவைகளைக் கொண்ட
எங்கள் விடுதி...
ஒரு "மாணவச் சரணாலயம்"

அறை அறையாக வரும்
"தி ஹிந்து" ஆங்கில நாளிதழை
மடிப்புக் கலையாமலும்..
விடுதிக்கே ஒன்று
என வரும்
"தின தந்தி " நாளிதழை
மடிப்புகளாலும்
கலை இழக்கச் செய்வோம்...

சாப்பாடு போட்டி,
பாட்டுப் போட்டி.
விளையாட்டுப் போட்டி,
கலை நிகழ்சிகளுக்கும்
பஞ்சமில்லை எங்கள்
விடுதியில்...

நட்பை மட்டுமல்லாது
நல்லவற்றையெல்லாம்
கற்றுக்கொடுத்த
எனல் கல்லூரி விடுதி
என்றும் எங்களுக்கு
"ஆலயம்" தான்.....
இன்னும் தொடரும்...
காத்திருங்கள்
உங்கள் தோழன் விக்னேஷ்

Tuesday, June 3, 2014

பில்ட்-அப் கவிதைகள்
உன் கேசம் என்ன,
என்
திசை
காட்டும் கருவியா???

அழியும் என தெரிந்தே
கட்டினேன் கடற்கரையில்
மணல் வீடு.!!!

அனுமதி கேட்காமல்
கனவுக்குள் நுழைந்தவளே
கனவிலாவது காதலித்துவிட்டு போ!!!


முதல் காதல் மறுக்கப்பட்ட போதே இதயத்தில் கீறல் 
விழுந்துவிடுகிறது.


யாருடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் 
என்பதை விட...
யாரில்லாமல் வாழ முடியாதோ 
அவள்தான் நீ.!!!
     


            அளவுக்கு மிஞ்சினால்

         அமிர்தமும் நஞ்சு

       பொய்யானது

        உன்னிடம்.!!!


Sunday, June 1, 2014

நீயும் காலன் தானடி - என்
காதலை வதை செய்ததால்
நானும் பாவம் தானடி - உன்னை
நான் காதல் செய்ததால்.  
தேவதையே !
உன் நினைவுகள்
என்னில் வரும்பொழுதெல்லாம்
நானும் பைத்தியம் தான் - என்
அறைசுவர்களுக்கு.
 
ன்பே! 
காகிதங்களின் காயங்கள்
கவிதைகள் தானடி - என்
இதயத்தின் காயங்கள் - நம்
காதல் தானடி !
 


Thursday, May 29, 2014

தொடக்கமும் முடிவும்!

தொடக்கமும் முடிவும்!

இதை கேட்டுட்டு போங்களேன்!

அன்றொருநாள் மழை
பொழியும் போது
அப்படி தான்,
நேற்று இரவு
இரண்டு மணிக்கு
ஒரு தடவை,
வெளியூர் பயணங்களின்
போது இன்னும் சிக்கல்,
விவஸ்தையே இல்லாத
காதல் கண்ட நேரத்தில்
வந்து தொலைக்கிறது

*****************

அவள் உதட்டால்
என் கன்னத்தில்
கொடுத்த அடி
இன்னும் ஆறாமல்
இனிக்கிறது.

***************

கத்தி காயத்தை
விட உயிர் போகும்
வேதனையை தருவது
“பிடிக்கல”
என்ற வார்த்தை!

***************

மரணம் கூட
இனிமை தான்
உன் நினைவோடு
சாவதென்றால்!

****************

உன் நினைவு
வரும்பொழுதெல்லாம்
ஏகாந்த வாசம்
என்னை சூழ்கிறது,
அது மரணவாயிலின்
காலிங்பெல்லாம்
இறந்துபோன
நண்பனொருவன்
சொன்னான்!

****************


இதுக்கு தான் சொல்றது ”ஆணியே புடுங்க வேணாம்”

Saturday, April 19, 2014

வைரம்...

சுரங்கம் தோண்டி
வைரங்களை தேடுகிறார்கள் வீணாக !


நீ நடக்கும் போது,

உன் பாதங்களை தீண்டும் மணல் துகள்களை
விட்டுவிட்டு ♥ ♥ 

அழகு தேவதை


மதிய நேரத்தில் நீ
குடை பிடித்து செல்கிறாய் !!
.
சூரிய கதிரோ
சுட்டெரிக்கிறது !!
.
உன் முகத்தை பார்க்க
முடியாத கோபத்தில் !!!!

தங்கை.....

அண்ணன்களின்
ரகசியமறிந்தவர்களாக
தங்கைகளே இருக்கிறார்கள்...

மணல் வீடு கட்டவோ
கட்டியதை இடிக்கவோ
தங்கைகள் தேவைப்படுகிறார்கள்...

நடை பழகும் நாட்களில்
கைபிடித்து கொள்ள
அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்...

அடம் பிடித்தோ
அழுது புரண்டோ
பொட்டோ, பூவோ
முதல் முதலில் தங்கைக்கே
வாங்குகிறான் அண்ணன்...

'' அ" வில் தொடங்கி
சைக்கிள் பழக்கி
மகிழுந்து வரை அண்ணன்களே
ஆசிரியர் தங்கைகளுக்கு...

அண்ணனாக மட்டுமன்றி
நண்பனாகவும்
சில நேரங்களில் தந்தையாகவும்
மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்...

தங்கைகளின் எந்தவித
கோரிக்கையும்
அண்ணன்களிடமே வருகிறது


தங்கைகளுக்கான முதல்
சிபாரிசை அண்ணன்களே
முன்னெடுக்கிறார்கள்...

அக்காக்களிடம் மறைத்த
அண்ணன்களின் காதலை
அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்...

அண்ணன்களுக்காக
அப்பாக்களிடம்
கோபம் கொள்வதில்
தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்...

தங்கைகளில்லா வீடு
அமைதியாகவே இருக்கிறது
தீராத மௌனம் சுமந்து...

திருமணமாகிச் செல்கையில்
அப்பாக்கள் அழுகிறார்களோ இல்லையோ
அழாமல் நடிக்க அண்ணன்கள்
கற்றுக் கொள்கிறார்கள்..

Sunday, April 13, 2014

கைப்பிடித்து நடக்கிறேனேன்று...


நான்
தூக்கத்தில்
தனியாய்
நடப்பதாய்
தோழர்கள்
என்னை
கேலி செய்கிறார்கள்...

வர்களுக்கு
எங்கே தெரியும்
நான் உன்
கைப்பிடித்து
நடக்கிறேனேன்று...

தொட்டு விட்டோமென்று..


டலோரமாய்
உன் கூட நடக்கையில்
உன் காலை
தொட்ட அலைகள்
எம்பி எம்பி
குதிக்கின்றன...

பௌர்ணமி நிலவையே
தொட்டு விட்டோமென்று...

Wednesday, January 29, 2014

உன் சிரிப்பினால்...


எப்போதெல்லாம் என்
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறாய்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?

உனக்கு கொடுக்க
நினைத்த முத்தங்களை
சேமித்து வைத்திருக்கிறேன்
சீக்கிரம் வாங்கிக்கொள்
வட்டி ஏறிக்கொண்டே
போகிறது !!!உன்னையெல்லாம்
எப்படி காதலித்துத்
தொலைத்தேன் ??
பாழாய்ப்போன மனம்
உன் பின்னே
ஒரு நாய்க்குட்டியைப் போல்
ஓடி என் உயிரை எடுக்கிறது...
 


நீ அழகானவள் தான்
ஆனால் உன்னைவிட
உன் அன்பு மிக அழகாக
இருக்கிறதுExcuse me !
என்னைக் கொஞ்சம்
கண்டுபிடித்துத்
தரமுடியுமா ?
உன் கண்ணுக்குள்
தான் எங்கோ
தொலைந்துபோனேன்
எத்தனை முறை
நீ கேட்டாலும் பதில்
சொல்ல அலுக்காத
கேள்வி ...
என்னை அவ்வளவு
பிடிச்சுருக்காடா..??உன்னைக் கட்டிகிறவ
கொடுத்து வச்சவடா என்கிறாய்
அந்தக்கொடுத்து வச்சவ
யாருன்னு தெரியணுமா ?
போய்க் கண்ணாடியிலே பாருடி
முட்டாளே...
 
 

போன ஜென்மத்தில்
நீ ஒரு கொள்ளைக்காரியாகத்தான்
இருந்திருக்க வேண்டும்
அடிக்கடி கொள்ளை
போகிறது என் மனம்
உன் சிரிப்பினால்.. 

‘ ச்சீய் போடா !! ‘

உன் கடிதம் இல்லாத
என் ‘இன்பாக்ஸை’
திறப்பதற்குபதில்
திறக்காமலே இருக்கலாம்

6‘ ச்சீய் போடா !! ‘
எங்கிருந்து கற்றுகொண்டாய்
இந்த அழகான வார்த்தையை
எங்கே இன்னொருமுறை
சிணுங்கு ?!!

மெயில்...

நான் உனக்கு மெயில்
எழுத உக்காந்தாலே
ஏன்தான் இந்த கடிகாரம்
வேகமாக சுற்றுகிறதோ ?

3

காதல்வாசம்...


காதல்வாசம்...


கூந்தலில் பூ வாசனை தெரியும்
இந்த பூவிலோ உன்
கூந்தல் வாசனையல்லவா
வீசுகிறது ? !

- தபூசங்கர்