Saturday, November 23, 2013


என்ன வித்தியாசம்..?

கதைக்கும்
கவிதைக்கும்
என்ன வித்தியாசம்..?
நான் பேசினால்
அது கதை..!
நீ பேசினால்
அது கவிதை..! 

கண்கள் பேசுமா..?



கண்கள் பேசுவதை
எங்கும் நான்
கண்டதில்லை பெண்ணே..!
உன் கண்களை
நான் சந்திக்கும் வரை..!

* * * * *


நான் உற்சாகம் இழந்து
வீழும் போதெல்லாம்
உன்னை நினைத்தாலே போதும் கண்ணே..!
எனக்குள் உற்சாகம்
தானாக வந்துவிடும்..!
என் உடலுக்குள் புது வேகம்
பிறந்து விடும்..!

* * * * *

பூமி தன்னைத்தானே
சுற்றியபடி
சூரியனையும் சுற்றிக்
கொண்டிருப்பது போல…
என் உடல் இங்கே சுற்றினாலும்
என் மனசு எப்பொழுதும்
உன்னைத்தான்
சுற்றிக் கொண்டிருக்கிறது..!

* * * * *

உன் நாவில்
தேனூறுகிறதா என்ன..?
நீ பேசுவதைக் கேட்டாலே
என் காதுகளிரண்டும்
இனிக்கின்றனவே..!

* * * * *

உன் பெற்றோர்களே உனை
ஒரு ஓவியமாய் தீட்டியிருக்கும் போது..!
கவிஞனான நான் உன்னைப் பற்றி
என் மனதிற்குள் பெருங்காவியமே
தீட்டி வைத்திருக்கிறேன்...
நீ வந்து படித்துப் பார்ப்பாய் என..!

* * * * *

ஒரு பூக்கூடையே
பூ வாங்க வருவது
போலிருக்கிறது..!
நீ... பூ வாங்க
வரும் அழகு..!

* * * * *

உன்னோடு சேர்ந்து நடப்பதென்றால்..!




உன்னோடு சேர்ந்து நடப்பதென்றால்
கடும் காடு மலை என்ன..?
சுடும் பாலைவனத்தில் கூட
நடந்து வருவேன்..!
உன் பூப்பாதங்களை தாங்கியபடி..! 

ஏதாவதொரு கவிதை சொல்..!





அலைபேசியில் அழைத்து
‘என்னைப்பற்றி
ஏதாவதொரு கவிதை சொல்…
அதுவும் இப்போதே சொல்லென்கிறாய்..!’
உன் அழகிய புன்சிரிப்பும்
ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த
உன் வெண்ணிலவு வெட்கமும்
ஆயிரமாயிரம் கவி சொல்லும் போது
பிறிதொரு கவிதை எதற்குப் பெண்ணே..!

இதழ் விரிந்தால்..!





பூக்களின் இதழ்
விரிந்தால்
புன்னகை மலரும் ..!
பூவிலிருந்து மணம்
விரிந்தால்
முகமே மலரும்..!
பூவினமே உன் இதழ்
விரிந்தால்
என் வாழ்வே மலருமடி ...!

எனை என்ன செய்தாய் பெண்ணே..?





என் அலைபேசி ஒலிக்கும் போதெல்லாம்
நீதான் அழைக்கிறாய்
என ஓடோடி வருகிறேன்..!
குறுந்தகவல் வரும்போதெல்லாம்
குறும்புக்காரி நீதான் அனுப்பினாய்
என ஆவலோடு ஓடி வருகிறேன்..!
நீ இல்லை என்று தெரிந்ததும்
வாடிப் போகிறேன்..!
இப்படி யார் அழைத்தனுப்பினாலும்
எனக்கு நீ அழைத்தனுப்புவதாகவே தோன்றுகிறது…
எனை என்ன செய்தாய் பெண்ணே..! 

மீண்டும் மீண்டும்..!



உன் அழகிய புன்னகை கூட
எனை அடியோடு
வெட்டி வீழ்த்துகிறது..!
அப்படி நான் ஆயிரம் முறை
அடியோடு வீழந்தாலும்...
அந்த வசீகரப் புன்னகைக்காகவே
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறேன்..!

நீ தீட்டிய மையினால்...




அஞ்சன மை தீட்டிய
அழகு தேவதையே…
நீ தீட்டிய மையினால்
உன் கண் மயங்கியதோ..?
இல்லையோ..?
நான் மயங்கி விட்டேன்..! 

உலகின் மிகச் சிறந்த சிற்பிகள்..!




இந்த உலகின்
மிகச்சிறந்த
சிற்பிகள் யார்..?
என்று போட்டி வைத்தால்
முதல் பரிசு
உன்னுடைய
பெற்றோர்களுக்குத்தான்
பெண்ணே..! 

இதழ்கள் என்றாலே..!





இதழ்கள் என்றாலே
எனக்கு என்றுமே
புத்துணர்ச்சிதான்..!
எழுத்துக்களைப் படிக்கத் தரும்
இதழ்களானாலும் சரி..!
அந்த எழுத்துக்களைப்
படித்துத் தரும்
உன் இதழ்களானாலும் சரி..! 

பேசவே முடியவில்லையடா..!




உன்னிடம் என்னால்
பேசவே முடியவில்லையடா..!
எப்படிப் பேசினாலும்
உன் பேச்சால்
எனை மடக்கி விடுகிறாய்..!
என பொய்க் கோபம் காட்டும்
என் பொன் மணியே...
என்னதான் நானுனை
பேச்சினில் மடக்கினாலும்...
எனை உன் ஓரேயொரு
ஓற்றைப் பார்வை மடக்கி விடுகிறதே..!
அதற்கு முன்பு என் பேச்சொன்றும்
பிரமாதமில்லையடி..! 

செல்லக் கோபமா..? செல்லாக் கோபமா..?




நான் என்ன பொய் சொன்னாலும்
அதை அப்படியே
நம்பிவிடுகிறாயே அது ஏன்..?
உனக்கு அழகில்லை என்றேன்...
உனக்கு அறிவில்லை என்றேன்...
கோபக்காரி நீ என்றேன்...
அத்தனைப் பொய்களையும்
அமைதியாய்க் கேட்டுவிட்டு
'ஆமாம்.. நான் அப்படித்தான்...
ஆளை விடு என்கிறாயே..' அது ஏன்..?
உன் நினைவின்றி என்னால் வாழ இயலாது...
உன் குரலின்றி என்னால் பேச இயலாது...
உன் பார்வையின்றி என்னால் பார்க்க முடியாது
என்றெல்லாம் தெரிந்தும்
இப்படிச் செய்கிறாயே அது ஏன்..?
இவைகளெல்லாம் செல்லக் கோபமா..?
இல்லை செல்லாக் கோபமா..? 

சத்தமில்லா யுத்தமொன்றை..!

 உன் வேல் விழிகளால்...
என் விழிகளுடன்
சத்தமில்லா யுத்தமொன்றை
செய்துவிட்டுப் போனவளே…
அந்த யுத்தத்தில்...
நான் அடியோடு வீழ்ந்து விட்டேன்..!
போர்க்கைதியாக அல்ல…
உன் மடியில்
காதல் கைதியாக..! 

உன் மீன் விழிகளை..!




என்னை மட்டுமல்ல
என் நினைவுகளையும் சேர்த்து
வசியம் செய்திருக்கிறாய் 
என்பதை…
நீ என்னருகே
இல்லாத போதுதான்
உணர்ந்து கொண்டேன்..!

                    *** + ***

பெண்ணே…
உன் மீன் விழிகளை
மூடிக் கொள்..!
மீனவன் வலையுடன்
வந்து கொண்டிருக்கிறான்..!

                    *** + ***
அழகின் சிகரம் நீ…
அறிவின் சிகரம் நீ…
பெண்மையின் சிகரம் நீ…
பேரழகின் சிகரம் நீ…
பொறுமையின் சிகரம் நீ…
பொய்மையின் சிகரம்..?
வேறு யார்… நான்தான்..!

                    *** + ***

நடமாடும் நூலகத்தைக்
கண்டேன்
நடமாடும் வங்கியைக்
கண்டேன்
நடமாடும் கவிதையைக் 
கண்டேன் என்றால்
அது நீதான் அன்பே..!

                    *** + ***

வீணை இசைக்காமலேயே
நாதம் எழுகிறதடி
உன் குதுகலப் பேச்சில்..!


                    *** + ***
 

பொன்னாபரணங்களின்றி..!




பொன்னாபரணங்களின்றி
எளிமையாக இருப்பதுதான்
உனக்குப் பிடிக்கும் என்றாய்..!
ஆயினும் பெண்ணே
உன் நெற்றியில் பூத்துள்ள
வியர்வைத் துளிகளனைத்தும்
வெண் முத்துக்கள் போன்றும்...
உன் இதழின் ஈரத்தில்
பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி
வைரம் போன்றும் மின்னுகின்றனவே...
இந்த ஆபரணங்களை
நீ என்ன செய்யப் போகிறாய்..! 

சந்தித்துக் கொள்ளும் போது..?




உன்னை சந்திக்கும் போது
நிறைய பேச வேண்டும்
என்ற நினைப்போடு
உனை சந்திக்க வருவேன்..!
நானும் உன்னுடன்
நிறைய பேசவேண்டுமடா
என்றபடி நீயும் வருவாய்..!
நாமிருவரும்
சந்தித்துக் கொள்ளும் போது
நாம்மால் வாய் திறந்து
பேச முடிவதில்லை..!
உனை உன் வெட்கம் 
பேச விடாமல் செய்து விட…
எனை உன்னழகு
பேச விடாமல் செய்து விட்டதடி…
நான் என்ன செய்வேன்..! 

உன் கெண்டை விழிகளை..!



உன் கெண்டை விழிக் கண்ணாலே
எனை சுண்டி இழுத்தது
போதும் பெண்ணே..!
சற்றேனும் உன் கெண்டை
விழிகளை தூங்கச் சொல்...
உனைப் பார்த்ததிலிருந்து
என் விழிகள் இமைக்க
மறுக்கிறது..!
இதயமும் இயங்க மறுக்கிறது..! 

யார் பெண்ணே நீ..?




கார்மேகத்தினைப் போலிருக்கும்
உனது கருங்கூந்தல்...
அதில் மூன்றாம் பிறை நிலவு
போலிருக்கும்
உன்னுடைய அழகு நெற்றி…
அதன்கீழே
கரிய நிறம் கொண்ட
வானவில்லைப் போலிருக்கும்
உனது அழகு புருவங்கள்…
வெட்டித் தெறிக்கும் மின்னலைப்
போலிருக்கும் உன்னிரு மின் விழிகள்..
பூத்துச் சிரிக்கும்
நட்சத்திரங்களைப் போலிருக்கும்
உனது புன்சிரிப்பு…
மாலை நேரத்து செங்கதிரோனை
அளவாக வெட்டியெடுத்தது
போலிருக்கும் உனது செவ்விதழ்...
வெண்மேகப் பட்டாடை போலிருக்கும்
உனது பட்டாடை...
எதைச் சொல்ல... எதை விட...
இத்தனையும் உன்னொருத்திக்கே
ஒரு சேரப் பொருந்துகிறதே
யார் பெண்ணே நீ..?

உன் முகம் காணாத..?




உன் முகம் காணாத
ஒவ்வொரு நாளும்
எனக்கு அமாவாசை போலத்தான்..!

ஒவ்வொரு ஜென்மமும்..!



ஒவ்வொரு ஜென்மமும்
உனக்காகவே
பிறந்து  வாழத் தயார்..!
அத்தனை ஜென்மங்களிலும்
நீயே என் காதல்
மனைவியாகப் பிறப்பாயென்றால்..!

உன் சுமை கூட...


என் தோள் மீது சாய்ந்தது
மலரா..? இல்லை மலர்க்கொத்தா..?
உன் சுமையை நான்
சுகமாய்ச் சுமக்க
நீ லேசாகிப் போனாய்…உன்னோடு சேர்ந்து நானும்..!

உதாசீனப்படுத்தும் சொல் கூட..!





ச்சீ…” என்று
உதாசீனப்படுத்தும் சொல் கூட
நீ வெட்கத்தில்
உதிர்க்கும் போது
மேலும் மேலும் உன்னோடு
உறவாடத்தான் தோன்றுகிறதே தவிர...
உனை விட்டுப் பிரியத் தோன்றவில்லை..!

உன் கட்சிதானடி.!


உன் கட்சிதானடி.!


என் வீட்டுக் கண்ணாடி கூட
உன் கட்சிதானடி..!
என்னைக்
காட்டச் சொன்னால்
அது உன்னைக்
காட்டுகிறது பார்..!